Sunday, March 21, 2010

பீலிங்க்ஸ்ஸுஸு

வயித்தை நிரப்பிறதுக்காக அவன் அவன் எவ்ளோ கஷ்டப்படுறான். அவனுக மாதிரியே இங்க ஒருத்தன் வலைப்பூவில இடத்த நிரப்பிறதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறான். அட என்னத் தாங்க சொன்னன். அம்பிட்டத தின்னு பசிய தீர்துக்கற மாதிரி மனசில பட்டத எல்லாம் எழுதி இந்த இடத்த நிரப்பிறதுன்னு முடிவு பண்ணியாச்சு. நாங்க எல்லாம் ஒரு தடவை முடிவு பண்ணினா அப்புறம் நம்ம பேச்சை நாங்களே கேட்க மாட்டோமில்ல...(ச்ச்ச்சும்ம்மா

நம்மட நாலு வருஷ கம்பஸ் வாழ்க்கை கிட்டத் தட்ட முடிவுக்கு வந்திட்டுது. ஆமா சார் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிட்டுது. மூஞ்சி புத்தகத்தில நம்ம நண்பர்கள் தங்கட பீலிங்க்ஸ்ஐ கொட்ட தொடங்கிட்டாங்க. விடுவமா நாங்க..நாங்களும் கொட்டுவம் இல்லே! கொட்டுறதுதான் கொட்டுறாய், அட வலைப்பூவில கொண்டே கொட்டு, இடத்தையும் நிரப்பினால் போல இருக்கும் எண்டிட்டு தான் இங்க கொட்ட வந்திருக்கான் சுயம்பு. 

சரி கவிதை மாதிரி ஒண்ணு எழுதுவம் எண்டு பிளான் பண்ணி இங்க வந்து குந்தியாச்சு.(ஆரம்பத்திலேயே கவிதை மாதிரி எண்டு சொல்லியாச்சு, வாசிச்சு முடிஞ்ச பிறகும் கவிதை மாதிரி எண்டு நம்பிட்டு போய்ட்டே இருங்க, நடு பிளாக்கர்ல காறி துப்பிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க)இதோ
கூப்பிடு தூரத்திலொரு
குறுக்குச் சந்தி
நம் லட்சிய பாதையில்!!! 

நிச்சயமில்லா கனவுகளுடன் 
நிரந்தரமாய் போன நட்புகளுடன்...

கூடவே 
போதும்டா சாமி என 
புலம்ப வைத்த வகுப்பறைகள்...
மருத்துவமே படிக்காமல் 
அறுவை சிகிச்சை செய்த ஆசான்கள்...
இடைக்கிடைதான் போனாலும் -நமக்காய்
நிரந்தரமாய் காத்திருந்த பின்வரிசை கதிரைகள்...
நித்திரையை குழப்பிய 
நண்பனின் கொறட்டை சத்தம்...
அனல் பறக்கும் விரிவுரையில் 
சில்லென வீசிய சிங்களத்து பைங்கிளிகள்...
நண்பகல் வெயில் குளித்து
நண்பிகளும் கூடி விளையாடிய கிரிக்கெட்... 

இவை தவிர்ந்த அனைத்தும் அறுசுவையாமென
அர்த்தம் காட்டிய கன்டீன் சாப்பாடு...
மூக்கு முட்ட குடித்து 
வயிறு வலிக்க வாந்தி எடுத்த பவிலியன்...

கோர்ஸ் வேர்க் குரூப் மெம்பர்ஸ் தேட 
ஒளித்திருந்த பஸ் கன்டீன்... 
தலை எழுத்தை தீர்மானிக்கும் ரெஜிஸ்டரில்
என் கை எழுத்திட்டே மை தீர்ந்த -நண்பர்களின் பேனாக்கள்...
வைவாவிற்கு மட்டுமே 
அணியப்பட்ட சீருடைகள்...
 ஏதோ கேள்விக்கு என்னவோ விடை எழுதி
எதிர் பாராமல் வரும் பரீட்சை முடிவுகள்...

அர்த்தமில்லா சீனியோரிட்டி
அளவில்லா போர்மாலிட்டி... 
போலித்தனமான புன்னகைகள் 
உரிமையான ஊடல்கள்...
அன்பே உருவான தழுவல்கள் 
அர்த்தமில்லா முறுகல்கள்...
சுயநல காற்று வாரியிறைத்த புழுதிகள்
விலை போன சுயங்கள்...
கருவிலேயே மடிந்து போன காதல்கள் 
இருந்தும் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்...
.....................................................................................
.....................................................................................
இவண்ணமே மேலும் சில 
மூட்டை முடிச்சுகளுடன்
கணப் பொழுதில் கடந்து விட்ட நான்காண்டு!!!   

ஓ இறைவா
ஒரு மந்தையில் எல்லா ஆடுகளுமே
தத்தம் திசையில் பயணிக்க போகுமொரு தருணம்....

அட ச்ச்சே ....
எதை மீட்டு பார்த்து எப்பிடி எழுதினாலும் கன்றாவி கவிதையும் வருதில்லை..பீலிங்க்ஸ்ம் வருதில்லை. கவிதை எழுத வருதில்லையே என்ற பீலிங்க்ஸ்ஐ தவிர!!!

அடங்கொய்யாலே பீலிங்கஸ்ஸயா நோண்டி பண்ணுறாய் எண்டு கடுப்பாகதீங்க நண்பர் பெருமக்களே!!! பீலிங்க்ஸ் என்று இன்னுமொரு புது முகமூடிய போட்டுக்கொள்ள நான் தயாரா இல்லை.  (எங்களுக்கெல்லாம் நடிக்கவும் தெரியாது..நடிக்கவும் வராது..நம்பிதான் ஆகணும் ). 

பிரிவு என்கிறது நமக்கு ஒன்னும் பெஸ்ட் டைம் இல்லையே!!! நம்மில பலருக்கும் இது பழகி போன ஒண்ணு தானே!  எங்கயாவது மனசில ரொம்ப ஓரமா ஒரு சின்ன வலி இருக்கத்தான் செய்யும், எண்டாலும் இது பழகிப்போன வலி. (இந்த வலியையே தாங்காட்டில் அப்புறம் எப்புடி இத படிச்சு முடிய வார தலை வலிய தாங்கப் போறீங்க ஆஹ்) ஒன்றாய் திரிந்த ஒவ்வொரு நட்பும் ஏதோ ஒவ்வொரு நாட்களில் பிரிந்து செல்ல தொடங்கிய போதே மர(ற)க்க தொடங்கிவிட்ட மனம்!!! 

ஒருவேளை பிரிவு நம்மிடடம் இருந்து பிரிந்து போகும் போது ரொம்பவே வலியா, பீலிங்க்ஸ்ஸா இருக்குமோ என்னவோ! இருந்தவரை, முடிந்தவரை நல்ல நண்பனாய் இருக்க முயற்சி செய்தேன் என்ற நம்பிக்கையுடன் பிரிவதற்கு என்னை தயார் படுத்தியாயிற்று 

"பிரிவோம் சந்திப்போம்" 


"Lecturers மட்டுமா அறுப்பாங்க,   நாங்களும் அறுப்பமில்ல"    5 comments:

சகாராவின் புன்னகை said...

பீல்டில லேட்டா வந்தாலும் நம்மள ஓவர்டேக் பண்ணி ஒருமையில் தூரம் போய்ட்டீங்கள்!

இந்த விசயத்தை நம்மளால எழுத முடியேல்ல... அல்லது அந்த மனநிலை இல்லை! ம்ம் நீ அழகாய் எழுதியிருக்கிறாய் வாழ்த்துக்கள் நண்பா.

//இதோ
கூப்பிடு தூரத்திலொரு
குறுக்குச் சந்தி
நம் லட்சிய பாதையில்!!! //

//ஓ இறைவா
ஒரு மந்தையில் எல்லா ஆடுகளுமே
தத்தம் திசையில் பயணிக்க போகுமொரு தருணம்....// இவை என்னைக் கவர்ந்த வரிகள்

ஆரம்பத்தில் இருந்த இறுக்கமான வார்த்தைகள் தழர்ந்து அழகா வந்திட்டுது. பிற எழுத்தாளர்களின் சாயல் வராமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நண்பன்
ப.அருள்நேசன்

Anonymous said...

"அர்த்தமில்லா சீனியோரிட்டி
அளவில்லா போர்மாலிட்டி...
போலித்தனமான புன்னகைகள் "

100% true....

சகாராவின் புன்னகை said...

பீல்டுக்கு லேட்டா வந்தாலும் நம்மள ஓவர்டேக் பண்ணி ஒருமைல் தூரம் போட்டீங்க

அழகா எழுதியிருக்கிறாய் நண்பா, என்னால் இந்த விசயத்தை எழுத முடியவில்லை, அல்லது அந்த மனநிலை இல்லை...

//இதோ
கூப்பிடு தூரத்திலொரு
குறுக்குச் சந்தி
நம் லட்சிய பாதையில்!!! //

//ஓ இறைவா
ஒரு மந்தையில் எல்லா ஆடுகளுமே
தத்தம் திசையில் பயணிக்க போகுமொரு தருணம்....// இந்த வரிகள் என்னை இன்னொருதடவை பார்க்கவைத்தன வாழ்த்துக்கள் மச்சான்,

ஆரம்ப எழுத்துக்களைவிட இப்போது நிறய மாற்றம் தெரிகிறது, இறுக்கம் தளர்ந்து தெளிந்த நீரோடைபோல இருக்கிறது பதிவு.keep it up

நண்பன்
ப. அருள்நேசன்

கருணையூரான் said...

சுயம்பு கலக்கிடிங்க ....நல்லா இருக்கடா .....தமிழ் அழகாக வந்திருக்கே .....வாழ்த்துக்கள் .....இன்னும் எழுதுங்கள்

///வலைப்பூவில இடத்த நிரப்பிறதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறான்.///
நானும் தான்டா

Anonymous said...

இந்த வலியையே தாங்காட்டில் அப்புறம் எப்புடி இத படிச்சு முடிய வார தலை வலிய தாங்கப் போறீங்க

Post a Comment