Thursday, March 18, 2010

எல்லாம் வல்ல இறைவனை வணங்கி!!



ணக்கம் வணக்கம் வணக்கம்
வாசக நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்

நண்பர்களே நான் உங்களில் ஒருவனே! .
ஒரு சாதாரண சராசரி மனிதனே!
கானமயில் ஆட கண்டிருந்த வான் கோழி என்று கேள்விப்பட்டிருக்கிறோம், இது கொஞ்சம் வித்தியாசமா கானமயிலாட கண்டிருந்த மயில் குஞ்சு தன்னிடம் உள்ள சிறகை விரிக்க முயற்சிப்பது போல மற்ற வலைப்பதிவர்களை பார்த்து நானும் எழுதவேண்டும் என்ற அவாவில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளேன் நண்பர்களே...

கடவுள் விசயத்தில மனிதனை பொதுவா மூன்று வகை படுத்தலாம்
ஒன்று கடவுளை முழுமனதாய் நம்புபவர்கள்..
ரெண்டு கடவுளை சந்தேகத்துடன் நம்புபவர்கள்..
மூன்று கடவுளை நம்பாதவர்கள்..
இதில் அடியேன் ரெண்டாவது வகையினேன்!!!

எனவே சம்பிரதாய பூர்வமாக கடவுள் வணக்கத்துடனேயே இடுகையை ஆரம்பித்துக் கொள்(ல்)கிறேன் நண்பர்களே!

புத்தியும் பலமும்
நல்ல புகழோடு உறுதிப் பாடும்
சிந்தையில் அச்சம் இல்லா
சிறந்த ஆரோக்கியம் நல்கும்
எந்தையை வாக்கு வன்மை
இதனோடு விழிப்பை நல்கும்
அந்தமில் வலை பதிவில் அழகுற எழுதுதற்கே

கடவுளே எப்படியாவது இந்த வலைப்பதிவை சிறந்த முறையில் வெற்றி பெறச் செய்து என்னை முதல் வகையாக மாற்றிவிடப்பா...!!!

ஆம் வலைப்பதிவர்களும், வாசகர்களும், நம்ம ஜோதிட வாத்தியார் சுப்பையா சார் சொல்வது போல கூகிள் ஆண்டவரும், தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானமும், மனித இனமும் உள்ளவரை வலைப் பதிவிற்கு அழிவில்லை தானே நண்பர்களே ! அதுதான் அந்தமில் வலைப்பதிவில் என்று கொஞ்சம் அழகா உல்டா பண்ணி இருக்கிறேன் பாருங்கோ.

சந்தேகமே இல்லை ஏற்கனவே இருந்த ஒரு கடவுள் வாழ்த்தை கொஞ்சம் மாற்றி விளையாடி உள்ளேன் . என்னடா வலைப்பதிவு தொடங்கின உடனயே சுடத் தொடங்கிட்டான் என்று ஜோசிக்கிறீங்க போல இருக்கு. தொடர்ந்து படிங்க நண்பர்களே! விளக்கமாய் சொல்கிறேன். தோண்ட தோண்ட தானே தங்கம் வரும்...(ஹி ஹி வருமா என்று நீங்களே படிச்சிட்டு சொல்லுங்க)

No comments:

Post a Comment