Thursday, March 18, 2010

ஒரு நாயகன் உதயமாகிறான்....ஹி...ஹி...:-)))

ஹே! ஹே! ஹா! ஹா!
வந்திட்டான்டா வந்திட்டான்டா- பொறுக்கி
எழுதப்போறான் எழுதப்போறான் - கிறுக்கி
Please விழுந்திடாம பார்த்துகோங்க -சறுக்கி.

யாரடா இந்த பொறுக்கி! இவனுக்கு இங்க என்ன வேலை???

போக்கிரின்னா விஜய்டா
வில்லன்னா தலைடா
பொல்லாதவன் தனுஸ்டா
கெட்டவன் தான் சிம்புடா-இந்த
பொறுக்கி
கொரு சுயம்புடா! 
இதென்னடா வம்பாபோச்சு ஆளாளுக்கு கிளப்புறாங்க என்றுதானே ஜோசிக்கிறீங்க...:-)))
இவைதான் நண்பர்களே எனக்குள் இருக்கிற ஒருவனுக்கு நான் வைத்துள்ள  புனை பெயர்கள். பெயர்களா??? என்னடா இது புது குழப்பமா இருக்கு என்று தானே நினைக்கிறீங்க!!!

ராதை மடியில் கண்ணன் இருந்தான்
வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
சீதை மடியில் ராமன் இருந்தான்
வேறு பெண்ணை நெஞ்சில் காண மறந்தான்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பது காதல் வடிவம்

அது போலவே இந்த பொறுக்கியும் சுயம்புவும்...
"இடுப்பு எலும்ப ஒடிச்சு வைச்சு 
அடு
ப்பில்லாம எரிய வச்சா -போக்கிரி பொங்கல் 
அங்க
 இங்க சுட்டு வந்து 
அருமையாக எழுதி வச்சா -பொறுக்கி பொங்கல்" என்கிறது நம்ம பொறுக்கிட Stlye
(கரெக்ட்டா Reference போட்டிடுவான் நண்பர்களே)

But நம்ம சுயம்பு கொஞ்சம் தன்னுடைய சொந்த முயற்சில (அட அதுதான் சுடாமதான் ) எழுத போகிறார்! Yes அவர் ஒரு சுயமான அம்பு! எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று கேள்விப் பட்டிருக்கிறோம் , இங்கே இந்த அம்பு சுயமாக பாயபோகிறது . தயவு செய்து இலக்கிற்கு வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமைதான் நண்பர்களே!!!

No comments:

Post a Comment