Saturday, March 20, 2010

இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா...

ஆழம் தெரியாம காலை விட்டாச்சு அனுபவிச்சு தானே ஆகணும். ம்ம்ம் தூக்கின காவடிய எப்படியோ இறக்கிதானே ஆகணும். அட நீங்க நினைக்கிற மாதிரி ஒரு பிரச்னையும் இல்லைங்க. நானும் வலைப்பூ எழுதிறன் எண்டு வெளிக்கிட்டதை பீலிங்க்ஸ்சோட சொன்னன். அவ்வளவுதான். 

கடைய திறந்தாச்சு, கல்லாப்பெட்டில கம்முன்னு இருந்து ஈ ஓட்டினா என்ன அர்த்தம்.... அதான் குசும்பு பக்கத்திலையும் கொஞ்சம் முதலை போட்டுரலாம் எண்டு நினைக்கிறன் பாருங்கோ! 

ரவுடி ரங்கா, நாய் சேகரு, பிளேட்டு பக்கிரி, கருத்து கந்தசாமி, வெடிகுண்டு முருகேசன் எண்டு நம்ம சுயம்புவிற்கும் ஒரு பந்தா பேர் ஒன்னு வேணாமா? அதான் சுயம்புக்கு சுன்னத்து சடங்கு பண்ணி யம்பு ஆக்கியாச்சு. சரி வெறும் யம்புவா இருநதா நல்லா இருக்குமா??? அதால இன்று முதல் குசும்பு பண்ண போற நம்ம யம்புவ "ஜல்சா யம்பு" என்று அழைப்போமாக ...... 



குசும்பு இல (௦01)...
ஒரு நாளு நம்ம ஜல்சா யம்பு முதல்முதல்ல ஒரு சூப்பர் மார்கேட்க்கு போயிருந்தாரு. கண்ணில அம்பிட்டத எல்லாம் கையில அள்ளிக்கிட்டு billing section ல ரொம்ப நேரமா line ல நிண்டு counter கிட்ட வந்த யம்புக்கு Counter ல எழுதி இருந்த வசனத்தை பார்த்ததும் ஒரே கடுப்பாகி கன்னா பின்னானு சத்தம் போட ஆரம்பிச்சாரு 

" உங்க மனசில என்னதான் நினைச்சிட்டு இருக்கீன்ங்க..நாம ரொம்ப நேரமா லைன் ல நிண்டு கவுண்டர் கிட்ட வந்தா நியாயம் இல்லாமா "NEXT CUSTOMER" எண்டு போடு வச்சிருக்கீங்களே"  



No comments:

Post a Comment