Thursday, March 18, 2010

கடவுள்+மனிதன்=சமநிலை

அழுகை வந்து அழுதால் தான் அது அர்த்தமுள்ள அழுகை, சிரிப்பு வந்து சிரித்தால் தான் அது அர்த்தமுள்ள சிரிப்பு ,Romance mood வந்து Romance பண்ணினால் தான் அது நல்ல Romance ,அது போல Sex mood வந்து...  போதும்டா நிப்பாட்டு!!! இப்ப என்ன சொல்ல வாறாய் என்று நீங்க கடுப்பாகிறது புரியுது. சொல்லி விடுகிறேன்!!!  அதாவது ஆக்கம் போட்டு கன நாளாய் போச்சு எண்டு Feel பண்ணிட்டு இருந்தன். But எழுதும் போதும் அதுக்கெண்டு ஒரு Mood வந்தாதான் எழுத்து நல்லா வரும் இல்லையா? அதைத்தான் சொல்ல வந்தன். சரி சொல்லியாச்சு இல்ல!!! அப்புறம் கிளம்பு எண்டு யாரோ முணு முணுக்கிற மாதிரி படுது!!! இல்லை இனிமேதான் ஆரம்பமே!!! 

ஆங்கில புத்தாண்டு பிறந்த முதல் நாள்... (அது எப்ப பிறந்தீச்சு என்று குசும்பு பண்ணாம தொடந்து வாசியுங்க.) A9 பாதையால் உந்து உருளியில் பயணம் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நம்ம கூட ஒரு சின்ன பொண்ணு நம்ம Bike ல!!! என்ன்ன கூட ஒரு Figure ஆ எண்டு அவசரப்பட்டு வாயை பிளக்கமா எல்லாரும் திறந்த வாயை மூடுங்க. 6 வயசு பொண்ணு சின்ன பொண்ணு தானே!!! அதை தான் சொன்னன்!!! A9 பாதைல சுமார் 40km வேகத்தில Bike சும்மா  காற்றாய் பறந்திட்டு இருக்கு...என்னது காற்றாய் பறந்திட்டிருக்கா... 40km லையா எண்டு Feel பண்ணுறது புரியுது நண்பர்களே ...!!!  விஜயகாந்த் பறந்து பறந்து அடிச்சா நம்புவீங்க, நாம நம்ம Bike 40km ல பறக்குது எண்டா மட்டும் நம்ப மாட்டீங்க இல்ல!!! சரி அதை விடுங்க.. நாம Mater இற்குள்ள   போவம்.

உங்க எல்லாருக்கும் தான் தெரியுமே, இப்ப A9 பாதைல இருந்த கட்டங்கள் எல்லாத்தையும் எவ்வளோ கஷ்டப்பட்டு உடைச்சி அழகா அடுக்கி வச்சிருக்காங்க எண்டு!!! கோயில் தொடக்கம் கொட்டில் வரைக்கும் சமத்துவம் உலாவும் இடமே என்ற Concept ல முடிஞ்ச அளவிற்கு சிறப்பா செயற்பட்டு உடைச்சிருக்காங்க. அந்த கட்டங்கள் எல்லாம் குண்டு மழையில் தான் சிதைந்து போயின என்பதெல்லாம் சுத்த பொய். வடக்கின் வசந்தத்தில அடிக்கிற காற்று கஷ்டம் இல்லாம எல்லா இடமும் வீசுறதுக்குதான் அப்பிடி இடிச்சு உடைச்சு  சிதைத்து அழகு படுத்தி இருக்காங்க என்பது வெத்திலை மேல சத்தியம்.   நம்ம கூட வந்த சின்ன பொண்ணும் ஆஹா எவ்ளோ அழகா உடைச்சு அழகு படுத்தி இருக்காங்க என்று ரசித்து பார்த்துக் கொண்டே வந்தது எங்களை போலவே...(வேற எப்பிடி இதை எழுத முடியும்???)   இந்த நேரத்தில் அந்த சின்ன பொண்ணு  நம்ம  கூட கதைத்ததில் மனதை தொட்ட ஒரு விஷயத்தை மையப் படுத்தி தான் இன்றைய Mater ஐ  Open பண்ணலாம் எண்டு Plan பண்ணுறன். இனி கொஞ்சம் Serious ஆகவே!!! 

A9 பாதை அருகில் ஒரு கோவில்...அதுவும் பார பட்சம் ஏதும் இன்றி சிதைத்து அழகு படுத்தப் பட்டிருந்தது. இதை  பார்த்ததும் அந்த சிறுமி "இங்கே கோவிலையும் உடைச்சு போட்டினம்" என்றாள், தொடர்ந்து "நான் நினைச்சன் கடவுள் என்றால் இவைக்கு பயம் எண்டு, இவைக்கு அவருக்கும் பயம் இல்லை என்ன?" என்றாள் அப்பாவித்தனமாக..."அண்ணா கடவுள் கொஞ்ச   பேரை நல்லவையாயும் மிச்ச ஆக்களை கூடாதவையாயும்  ஏன் படைச்சவர்?" என்பது அவள் வாயிலிருந்த வந்த இரண்டாவது வினா. இது நம்ம எல்லோருடைய மனதிலும் ஒரு தடவையாவது தோன்றி இருக்க கூடும் என்றாலும்  6 வயது சிறுமியின் சிந்தனையை பொறுத்தவரை இது ஒரு பெரிய விடயமே என்பது மறுக்க முடியாதது, மறுக்கவும் கூடாது. "நான் அம்மா பகவானிடம் கேட்கப் போகிறேன் இந்த உலகத்தை நல்லதாக மாற்றுங்கோ என்று, ஏனென்றால் மற்ற சாமி ஒருத்தரும் எங்கை எண்டு தெரியாது, இவை தானே இங்க இருக்கிற சாமி என்ன அண்ணா ?"...ஆம்...இந்த குறிபிட்ட வசனம் தான் என்னை தொடர்ந்து நான் எழுதப் போகிற ஒரு கருத்தை சிந்திக்க வைத்தது. இப்போது கணிசமானவர்கள் அம்மா பகவானையும், சத்திய சாய் பாபாவையும் கடவுளாக, கடவுளின் அவதாரமாக ஏற்று வழிபடத் தொடங்கி விட்டார்கள். இருக்கிற தெய்வம் போதாது என்று இன்னும் தெய்வமா என்று சலித்துக் கொள்கிறவர் மத்தியில் அவர்களை முற்று முழுதாக மனப் பூர்வமாக இவர்கள்  வழிபடுகிறார்கள்.  அது ஏன்??? கண்ணன், ராமன் போன்று இல்லா விட்டாலும்  அவர்கள் வரிசையில் இவர்களும் அவதாரமாய் போனது  ஏன்???

"பாவங்களைப் படைத்தவன் சாத்தான்- But சாத்தானை படைத்தவன் கடவுள், So கடவுளே மிக பெரிய பாவி" என்று ஓஷோவும்... "கடவுள் இருக்கிறார் ஆனால் மதங்கள் சொல்வதைப் போல் இல்லாமல்" என்று நண்பர் அருள்நேசன் போன்றவர்களும் "கடவுள் காணமல் போய் விட்டார்" என்று மற்றும் சிலரும், "ஆண்டவனை பார்க்கணும்... அவனுக்கு ஊத்தணும்... அப்போ நான் கேள்வி கேட்கணும்" என்று இன்னும் சிலரும்  "கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்... அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்"  என்று காதலர்களும், வேறு பல காரணங்களுக்காய் வேறு பலரும்  கடவுள் மேல் கடுப்பாகி அவரைத் திட்டிக்கொண்டும் தேடிக்கொண்டும் திரிந்தாலும்  எப்படியாவது அந்த கடவுள் யார் என்று பார்த்து விட எல்லோருமே ஆவலாய்த்தான் இருக்கிறோம். எனக்கு கூட கடவுளை கொஞ்சம் அவசரமாய் பார்க்கணும் என்று விருப்பம், ஊத்தி  கொடுக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ இல்லை,  அவனை கட்டி வச்சு உதைக்கிறதுக்கு!!! அதை விட பெரிய Punishment ஒன்றும் இருக்கு!!! ஒரு கிழமை வேண்டாம் At least ஒரே ஒரு நாள் கடவுள்  என்னை போல மாறி  வாழ்ந்து பார்க்கணும் என்பதுதான். அப்ப தெரியும் மனிதன் நிமிசத்துக்கு ஒருக்கால் கடவுளே கடவுளே என்று ஏன் கடவுளை கூப்பிடுகிறான்  என்று. ஏதோ தமிழ் சினிமால வாற  மந்திரிமார் இருந்திட்டு எப்பவாவது தொகுதிக்கு வந்திட்டு போற மாதிரி, இல்ல நம்ம ரொசானும் அருளும் இருந்திட்டு எப்பவாவது Lectures இற்கு வந்திட்டு போற மாதிரி எப்பவாவது  ஒரு நாள் திடீர் என்று தோன்றி, உன்னை சோதிக்கவே திருவிளையாடல் புரிந்தோம், என்ன வரம் கேள் தருகிறேன் என்று சொல்லி அவன் கேட்கிறது சரியா தப்பா என்று கூட யோசிக்காம வேட்டைக்காரன் விஜய் மாதிரி "இந்தா வச்சுக்கோ" எண்டிட்டு டக் என்று மறைந்து போனால் மிச்ச நாள்ல நாம படுற கஷ்டம் எப்பிடி கடவுளுக்கு புரிய போது ஆஹ்!!! இப்பிடி எல்லாம் பல சிந்தனைகளுடன்  இருக்கிற எனக்கு அந்த சிறுமியின் வார்த்தை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. அதானே ஏன் அம்மா பகவானை, சாய் பாபாவை கடவுளாக நம்புறாங்க??? சரி இவர்கள்  முந்தி நாம் அறிந்த கண்ணனை போலவும் ராமனை போலவும் செயற்கரிய செயல்களை கூட செய்யவில்லையே???

ஓஷோ அடிக்கடி கூறுவது குழந்தைத் தனமாய் மாறி விடுங்கள் என்பதை தான். எதையும் ஆச்சரியமாய் பாருங்கள் என்பதைத்தான். எதையும் அறிவு கண் கொண்டு ஆராயாமல் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதைத்தான். அப்போதுதான் நீங்கள் அந்த கடவுளை அனுபவிக்க முடியும் என்கிறார் அவர். 

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இருந்தால் எங்கே? சாய் பாவாவும் அம்மா பகவானும் கடவுளா? எப்படி நம்புவது? என்று ஆயிரம் கேள்வி கேட்டு குழம்பிக்கொண்டு இருக்கும் போது அந்த குழந்தை எந்த சந்தேகமும் இல்லாமல் கண்ணுக்கு தெரிகிற கடவுள்கள் இவர்கள் என்று ஏற்றுக் கொள்கிறது. அதற்கு மேல் அவள் தன்னை குழப்பிக் கொள்ளவும் இல்லை...குழம்ப வேண்டிய அவசியமும் இல்லை. இதுதான் ஓஷோ சொன்ன குழந்தை தனமாக இருக்கலாம். சரி அது குழந்தை குழம்பாமல் ஏற்றுக் கொள்கிறது...பெரியவர்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள். சரி இதற்கு இப்படி ஒரு காரணத்தை முன் வைக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்த காரணத்தை எழுதத்தான் இவ்வளவு Built -Up குடுத்தேன். (நண்பர்களே கவனியுங்க. இவர்கள் கடவுள்கள்தான் என்று சொல்ல நான் முயலவில்லை. இவர்கள் உண்மையில் கடவுளின் அவதாரமாய் இருந்தால் இது காரணமாய் இருக்கலாம் என்றே சொல்ல முயல்கிறேன்


சமநிலை பற்றி அடிக்கடி நாம் கதைக்கிறோம் இல்லையா.? எதிலும் சமநிலை இருக்கவேண்டும், இருக்கிறது என்பதெல்லாம் யதார்த்த பூர்வமான உண்மைகள் இல்லையா? அப்படி பார்த்தால் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் கூட சமநிலை ஒன்று இருக்க வேண்டும். நான் நினைக்கிறேன் அந்த சமநிலையை பேணுவதற்காக  கடவுள் இப்போது  தன் செயற்பாடுகளை மட்டுப் படுத்தி விட்டார் என்று. அரச அதிபர் கிராம சேவகரிடம் தன் பொறுப்புகளில் சிலதை கொடுத்தது போல இப்போ இந்த பகவான்களிடம் கொஞ்ச பொறுப்புகளை கடவுள் கையளித்திருக்கிறார். புராணக் கதைகளை பார்த்தால் புராண கால மனிதன் கடவுளை நோக்கி தவம் செய்து, தவம் செய்து அவரைப் போட்டு நச்சரித்து தனக்கு வேண்டியதை எல்லாம் பெற்றுக்கொண்டான். சின்ன உதாரணம் சொன்னால் புஸ்பகவிமானம், நாக அஸ்த்திரம் என்று எல்லாத்தையும் கடவுளும் நேரடியாக  வந்து கொடுத்தார். (நேரடியா வராமல் விட்டால் மற்ற மனிதன் லவட்டிட்டு போடுவான் என்று தானே நேரில் வந்து கொடுத்தாரோ தெரியாது).  அந்த புஸ்பகவிமானம் தான் இன்றைய விமானம். பாரதப் போரில் பயன் படுதப்ப் பட்ட நாகாஸ்திரம் அணு ஆயுதம் போன்றது என்று வீரகேசரி வாரப் பத்திரிகையில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில் படித்தேன். ஆனால் நவீன மனிதன் செயற்கை கோள் முதல் அணுகுண்டு வரை இப்படி எல்லாமே தானே தனக்காக கடவுளை எதிர் பார்க்காமல் தயாரித்துக் கொண்டுள்ளான். அதாவது மனிதன் தான் செயற்பாடுகளை விரிவு படுத்தியுள்ள போது சமநிலையை பேணுவதற்காக கடவுள் தன் செயற்பாடுகளை மட்டுப் படுத்தியுள்ளார். தற்போதைய மனிதனுக்கு மன நிம்மதிக்காக மட்டுமே கடவுள் தேவைப்படுகிறார். ஆகவே அம்மா பகவான், சாய் பாவா போன்ற கடவுள்கள் தான் இப்போது மனிதனுக்கு தேவை. 

கடவுள் Busy ஆக இருந்த போது பூமியில் ஒரு சில பிரச்சனைகளை சமாளிக்க தன் அடியாட்களான நந்தி, ஆதிசேசன் போன்றவர்களை அனுப்பியதாக படித்திருக்கிறோம் இல்லையா. அவர்களை போல் இவர்களும் அவருடைய சாதுவான தொண்டர்களாக இருக்கலாம் என்பது என் கருத்து. பிறகு ஒரு நாள் சிவ பெருமான் நேரில் தோன்றி "திருவிளையாடலில் இது எல்லாம் சகயமப்பா" என்று சொன்னாலும் சொல்லக்கூடும் எது எப்படியோ இப்போ சமநிலையும் பேணப்படும், மனிதனும் நிம்மதியாக இருக்க முடியும் இல்லையா.  இதுவரை கண்ணுக்கு தெரியா கடவுளை நம்புகிற நாம், அந்த சிறுமி சொல்வது போல இவர்களை கண்ணுக்கு தெரிகிற கடவுளாய் நம்பினால் தவறில்லையோ எனவும் சிந்திக்க தோணுது.

மனப்பூர்வமான நம்பிக்கையுடன், தூய்மையான அன்புடன்  ஒன்றை நாம் நம்புகிறபோது, அந்த ஒன்றின் மீதான நம்பிக்கையும் அன்பும் பிறருக்கு இடைஞ்சல் இல்லாதபோது,  அந்த ஒன்று எங்களுக்கு மன நிம்மதியை தருகிற போது அந்த ஒன்று தான் கடவுள் ஆகிறது என்பது என் கருத்து. கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றால் தூய்மையான அன்பினால் வருகிற நிம்மதியில் இருக்கமாட்டாரா ? எங்கள் வலிமை குறைகிறபோது சமநிலையை பேண தன் செயற்பாட்டை விஸ்தரிக்க மாட்டாரா என்ன? 

"ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே" அப்பிடியா???. ஓகே ஓகே  முடிஞ்சுது! தமிழ் சினிமா படம் அடிக்கடி பாக்கிறதால வந்த பாதிப்பு. பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க மக்களே.


பி.கு:நண்பர்களே கவனியுங்க. இவர்கள் கடவுள்கள்தான் என்று சொல்ல நான் முயலவில்லை. இவர்கள் உண்மையில் கடவுளின் அவதாரமாய் இருந்தால் இது காரணமாய் இருக்கலாம் என்றே சொல்ல முயல்கிறேன்

No comments:

Post a Comment