Thursday, March 18, 2010

கதை கதையாம் காரணமாம்....



"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது-
அதனிலும் அரிது காரணங்கள் இல்லாத காரியங்கள் அரிது"
சட்டத்திற்கு மட்டும்தான் முடிவுகள் எடுக்க காரணம் தேவையில்லை காரியம் மட்டுமே போதுமானது என்கிறார் கண்ணதாசன்...காரணங்கள் இல்லாத காரியங்கள் உண்மையில் அரிது தான். என்னடா Built Up எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு என்றுதானே பார்க்கிறீங்க :-)))

யானையைப் பார்த்து ஏன் யானை என்கிறர்கள்..பூனையைப் பார்த்து ஏன் பூனை என்கிறர்கள் யானையை பூனை என்றும், பூனையை யானை என்றும் சொன்னால் என்ன....??? இப்படியான விசித்திரமான வினோதமான விடைகாணா முடியாத சில பல கேள்விகள் என்னை போலவே உங்கள் மனதிலும் எழுந்திருக்கும்... காரணங்கள் தெரிய வருமானால் ஒரு மன நிறைவு இல்லையா???

இங்கே நான் எழுத போகிற பதிவுகளின் கருத்துகளுக்கு சொந்தக்காரர்கள் அல்லது நான் படித்ததில் இவை இவை எங்கள் மனதை தொட்டு விட்டன என்று கூறி அதை மீட்டு பார்க்கச் செய்கிறவர்கள் எனக்குள் இருக்கிற நானும், வெளியில் பிறருக்கு தெரிகிற நானும், நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிற நானுமே. நான் பதிவு எழுதுகிற போது இந்த மூவரில் யார் தங்களுக்கிடையிலான கருத்து மோதல்களில் வெல்கிறார்களோ அந்த ஒருவனின் கருத்தே இங்கே பிரதி பலிக்கப்பட போகிறது!

கற்றவை, கேட்டவை, பார்த்தவை, அனுபவித்தவை, கற்க நினைப்பவை, கேட்க நினைப்பவை, பார்க்க நினைப்பவை, அனுபவிக்க நினைப்பவை என்ற காய்களை கொண்டு அவர்கள் ஆடப்போகும் ஆடு புலியாட்டத்தின் முடிவுகளே இந்த பதிவுகளில் பிரதிபலிக்க போகின்றன....இந்த ஆட்டத்தில் வெல்லப் போகிற அந்த அவனே எனக்குள்  ஒருவன். ஹி ..ஹி அவன் நான் இல்லை...

No comments:

Post a Comment