Tuesday, March 23, 2010

"யாதொன்றும் இல்லை நோக்கம் -வலைப் பூவை நிரப்புவதைத் தவிர"

இன்னும் ஆறே நாளில எக்ஸாம். எக்ஸாம் டைம்லயாவது படிங்கடா எண்டு கம்பஸ்ல லீவும் விட்டாச்சு. கொஞ்ச நாளா படிக்கிற மூட் இல்ல. ம்ம்ம்ம் உனக்கு எப்பதான் அது இருந்திருக்கு எண்டு மிஸ்டர் மனச்சாட்சி கேட்கிறார். அவர் கிடக்கிறார். அவர் அப்பிடிதான். மனச்சாட்சிய எல்லாம் பார்த்திட்டிருந்தா பொழைப்பு ஓடுமா என்ன? இப்ப கொஞ்ச நாளா பதிவு எழுதிற மூட். உடனவே எழுதிடணும். விட்டா பிடிக்க முடியாது. அட நான் மூட பற்றி சொன்னனுங்க..இதுக்க நீங்க வேற.. ரொம்பத்த்த்தான் குசும்பு!!!

பர பரப்பா பேசி, பப்பறப்பா என ஊடகங்கள் எல்லாம் தணிக்கை இல்லாமலே ஒளிபரப்பு செய்து, அட அதுதாங்க நம்ம நித்தியானந்தா மேட்டர், இப்ப தான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க தொடக்கி இருக்காங்க மீடியா காரனுக! சும்மா சொல்லக் கூடாது, சும்மா பிரிச்சு மேஞ்சிடாங்கல்ல. அப்பிடியே அடிச்சு, துவைச்சு, காய வைச்சு, அயன் கூட பண்ணிடானுங்க எண்டா பாருங்களேன்.
பிரமச்சாரி எண்டு சொல்லிக்கொண்டு அப்படி செஞ்சது நித்தியானந்தர்ட தப்புதாண்ணே! ஆனால் மீடியா காரனுக அப்பிடி பண்ணினது தான் நம்ம மைன்ட்ல ரொம்ப ரொம்ப தப்பா படுது.

நித்தியானந்தா பிரமச்சாரி எண்டாரு, போதனை செய்தாரு, பொம்பிளை சாவகாசம் வச்சிக்கிட்டாரு...நீங்க பின்னி பெடல் எடுத்தீங்க சரி. நடிகை ரஞ்சிதா உங்களுக்கு என்ன பண்ணினா? தானும் பிரமச்சரியம் பூண்டிருக்கேன் எண்டாங்களா, போதனை பண்ணினாங்களா, இல்லை பஜனைக்கு வாவென்று தான் அழைத்தாங்களா??? இல்லையே!

அட விபச்சாராம் தானே தப்பு, விருப்பத்தோட நடந்தா தப்புன்னு சட்டம் சொல்லுதா??? ஊடகங்கள் கூட அப்பிடித் தானே சொல்லிச்சு. இந்த வீடியோவை வைத்து அவங்க மேல சட்டப்படி அக்சன் எடுக்க முடியாது எண்டு. அப்ப ரஞ்சிதா மேல சட்டப்படி தப்பு இல்லைல. அப்புறம் ஏன்??? நீங்க செய்த வியாபாரம்தான் உண்மையில் விபச்சாரம். "ஊடக விபச்சாரம்". நடிகை ரஞ்சிதாவும்  ஒரு பொம்பிளை தானே! உங்க அக்கா தங்கச்சிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தா அதையும் எடுத்து சுவாமியாரின் காம லீலை எண்டு படம் ஒடுவீங்களா? என்னை மாதிரியே எத்தினை நாய் நாக்க தொங்க போட்டிட்டு ரசிச்சு பார்த்திருக்கும் தெரியுமா???  


சரி வீடியோ எடுத்தீங்கல்ல. நேர கோர்ட்ற்கு போங்க. சரியான ஆதாரங்களை சமர்பியுங்க. மீதிய கோர்ட் முடிவு பண்ணட்டும். அது சமுதாயத்திகு நீங்க செய்த சேவையா இருக்கட்டுமே! சாமிய தூக்கி உள்ள போட்டால் மூட நம்பிக்கையோட அலை(ழி)யுற சனத்திற்கு அவரோட வேஷம் புரிஞ்சிட்டு போது!  ஒளிபரப்பு செய்து அம்பலப் படுத்தாட்ட்டி ஏதாவது வம்பு தும்பு பண்ணி தப்பிச்சிருவான் சாமி எண்டுறியளா? அதுக்கு சப்போர்ட் பண்ண போறது யார் சார்? "கரு+நா(ய்)+நிதி" போன்ற அரசியல்வாதிகள் தானே. ஆனால் எல்லாரும் ஒண்டா சேர்ந்து பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நடத்துங்க.  முதல்ல நீங்க திருந்துங்கயா. அப்புறம் மக்களோட மூட நம்பிக்கைகளைப் பற்றி பார்க்கலாம்.  


ஊர் முழுதும் எதனை கற்பழிப்புகள் நடக்குது. செஞ்சதும் இல்லாமா படம் புடிச்சு இன்டெர்நெட்ல வேற போடுறாங்க. அதுக்கின்னே எத்தினை கும்பல் திரியுது. அவங்களையும் இப்படி கொஞ்சம் கிழிக்கிறது. செய்யமாட்டீங்க. ஏன்னா, ஒண்டு உங்களுக்கு பிசினஸ் இல்லை. ரெண்டு அவனுக உங்க அடிவயித்தில சொருகிட்டு போயிட்டே இருப்பாங்கற பயம். 

யரோ சொன்னாங்க நடிகை ரஞ்சிதா புருஷன் ஆமில இருக்காராம் எண்டு. உங்க நாட்டைக் காப்பாத்த தானே அந்த மனுஷன் எல்லைல நிற்கிறான். அவன் குடும்ப மானத்தை காப்பாத்த உங்களால முடியலியே! அந்த மனுஷன் அங்க நிற்கிறதால தானே அவன் பெண்டாட்டிக்கு இந்த நிலை! அவனோட மன நிலை எப்பிடி இருக்கும் எண்டு ஜோசித்து பார்த்தீங்களா? இது மாதிரி எத்தினை ஆமிக்காரன் பெண்டாட்டிங்க. இப்ப எல்லைல நிற்கிற ஒவ்வொரு புருஷன் நினைவும் என் பெண்ட்டாட்டி எந்த ஆசிரமத்தில பஜனைக்கு போறாளோ எண்ட சிந்தனைல இருக்குமா இல்ல நாட்டு எல்லைல இருக்குமா??? அதுசரி, நவராத்திரி தினத்தை முன்னிட்டு உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக உன்னை கொடு என்னை தருவேன் ஒளிபரப்புற பார்ட்டி தானே நீங்க. உங்களுக்கு எங்க இதெல்லாம் புரியப் போது.


"கதவைத் திற காற்று வரட்டும்" அவரோட புத்தகத்தை படிக்காமலே கிழி கிழி எண்டு முடிஞ்சவரைக்கும் கிழிச்சு தள்ளிட்டீங்க. நித்யானந்தா என்ற சுவாமி வேசத்தில் ஒளித்திருந்தது ஒரு ஆசாமிதான். மறுப்பில்லை. அட ஏன் சார் நித்தயானந்தா என்ற தனி மனிதனை மட்டும் பார்க்கிறீங்க. கருத்துக்களை மட்டும் பார்க்கலாமே! தயவு செய்து நித்யானந்தாவிலிருந்து கடவுளை நோக்கி போகாதீங்க. நித்யானந்தாவின் கருத்துக்களில் இருந்து கடவுள் தன்மையை நோக்கி போய் பாருங்க. வெறும் பன்னாடைகளா இல்லாம கொஞ்சம் அன்னமாயும் இருங்க . அங்கேயும் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. நல்ல கருத்துக்கள் நாசமா போயிட கூடாது. எனக்கு புரிந்தளவில் கடவுள் தன்மையை உணர்கிறபோது கடவுளை உணரலாம் என்பதே ஓஷோவின் கருத்து.  

கருத்து சொன்னவனே கடைப் பிடிக்காம கம்பி நீட்டிட்டான். ம்ம்ம் இதில நாம் வேற பின் பற்றணுமாக்கும். இதான் இதான் சார் நாம் எல்லார் கிட்டயும் இருக்கிற மிக பெரிய தப்பு. மற்றவன் செய்யட்டும் அப்புறம் நான் செய்கிறேன் என்பது. முதல்ல நீங்க செய்யுங்க, அடுத்தவன் தானாத் தொடங்குவான்.

கருத்து சொன்னவனே ஒரு கஸ்மாலம்...இதில கருத்த கவனியுங்க எண்டுது ஒரு பேமானி எண்டு கடுப்பாகாதீங்க.  வாஸ்தவம் தான். அப்பிடி பார்த்தா கீதையை தூக்கி அப்பிடியே நெருப்பில போட்டிருங்க. கவியரசர் கவிதைகளை எங்காச்சும் தூரவா கொண்டே ஒரு குளத்திலையோ குட்டையிலையோ போடுங்க. ஆமா சார், நீராடும் தோழி பெண்களின் மேலாடையை இழுத்து ரசித்தவன் தான் நம்ம கீதை சொன்ன கண்ணன். "ஒரு  கையில்  மதுவும்  மறு  கையில் மாதுவும் இல்லாமல் நான் மாண்டு போனால் நீ பிறந்ததன் அர்த்தம் என்னவென்றே இறைவன் கேட்பான்" என்று பாடி கொஞ்ச காலம் வாழ்ந்தும் காட்டியவர்தான் தத்துவ பாதை சொன்ன கண்ணதாசன்.

தனது அந்தரங்களின் மென்மையும் மேன்மையும் புரியாதவனே பிறரின் அந்தரங்களை அலட்சியப் படுத்துகிறான், அம்பலப் படுத்துகிறான் என்பது பாலகுமாரன் சாரோட மிக அற்புதமான் வரிகள். இதை கொஞ்சம் நிதானமாய் சிந்தித்து பாருங்கள். நிதானமாய் புரிந்து கொள்ளுங்கள்.

 நீ யாருடா பெரிய பருப்பு? அப்ப தப்பு செஞ்சவனை தட்டிக் கேட்க வேணாமா? தண்டிக்க வேணாமா? நடிகை ரஞ்சிதா செஞ்சது சரியா? 


நான் ஒண்ணும் நித்யானந்தருக்கு ஜால்ராவும் இல்லை. நடிகை ரஞ்சிதாவிற்கு வக்காலத்தும் இல்லை. ஆனால் யாரு சார் நீங்க, தட்டிக் கேட்கவும் தண்டால் எடுக்கவும். உங்க நெஞ்சில கை வைத்து உறுதியா சொல்லுங்க பார்ப்பம் எங்க படுக்கை அறையில இப்படி ஒரு கேமரா ஒளிச்சு வச்சிருந்தால் இப்பிடி ஒரு படம் எடுத்திருக்க முடியாது என்று...இல்லை இனி எடுக்கவும் சந்தர்ப்பம் வரவே வராது என்று. ஒவொரு மனிதனின் அடிமனதின் எங்கோ ஒரு மூலையில் நித்யானந்தாக்கள் ஒழிந்தே கிடக்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் அவர்களின் வெளிப்படு திறன் மட்டும் மாறுபடலாம். அவ்வளவே!!!


மனித மனமானது உணர்ச்சிகளின் கலவை. இதுவே இயற்கையின் நியதியும். சந்தர்பங்களில் மனிதன் சறுக்கி விட கூடும்! நீங்கள் தண்டிக்கவும் வேண்டாம், மன்னிக்கவும் வேண்டாம். தப்பானவன் என்று தெரிந்தால் தள்ளி நடவுங்கள். தனிமையே அவனை தண்டிக்கும், மன்னிக்கும், திருத்தும்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா....ஒரு மாதிரி ஒரே மூச்சில பதிவு எழுதி முடிச்சாச்சு. ப்ளீஸ் மகா ஜனங்களே உங்களை கெஞ்சி கேட்டுக்கிறன், நம்மளை மட்டும் துவைச்சு காய போட்டிடாதீங்க!!! எவன் எக்கேடு கெட்டா நமக்கு என்ன? 

"யாதொன்றும் இல்லை நோக்கம் -வலைப் பூவை நிரப்புவதைத் தவிர"      


Monday, March 22, 2010

வெட்கம் பூசிய முகம் -அது முழுதும் காதல்அமைதியாயொரு அந்தி வேளை
ஆரவாரமில்லாமலொரு பூங்கா 
அடர்ந்து படர்ந்தவொரு பூஞ்செடி 
அதன் மறைவிலொரு பைங்கொடி!!!

பாதி மூடிய கண்கள் 
பவள உதட்டிலோ கிறக்க புன்னகை 
சிறிதாய் கலைந்த கூந்தல்
சீரும் சீரில்லாமலுமாய் சுவாசம் 
சிம்பொனியை சீண்டும் சிலிர்ப்பான சிணுங்கல்
வெட்கம் பூசிய முகம் -அது முழுதும் காதல்
வியர்வை குளித்த சங்கு கழுத்து 
நம்பிக்கையில் நழுவிப் போன தாவணி 
உரிமையாய் தழுவும் கைகள்!!!

அடே பாவி 
இவளை போய் படம் எடுத்து 
இன்டர்நெட்டில்...ச்சே
கொடுத்து வசிருக்கணும்டா இவ கூட வாழ
கெடுத்து வச்சிருக்கியேடா இவளோட வாழ்வ!!!

பார்க்கிற நீ இருக்கு மட்டும் -இப்படி 
பரதேசிங்க இங்க இருக்கும் 
ஈனமாய் ஒரு பெண்குரல் எங்கிருந்தோ... 
கூனி குறுகிப் போகிறேன் 
நான்!!!Sunday, March 21, 2010

பீலிங்க்ஸ்ஸுஸு

வயித்தை நிரப்பிறதுக்காக அவன் அவன் எவ்ளோ கஷ்டப்படுறான். அவனுக மாதிரியே இங்க ஒருத்தன் வலைப்பூவில இடத்த நிரப்பிறதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறான். அட என்னத் தாங்க சொன்னன். அம்பிட்டத தின்னு பசிய தீர்துக்கற மாதிரி மனசில பட்டத எல்லாம் எழுதி இந்த இடத்த நிரப்பிறதுன்னு முடிவு பண்ணியாச்சு. நாங்க எல்லாம் ஒரு தடவை முடிவு பண்ணினா அப்புறம் நம்ம பேச்சை நாங்களே கேட்க மாட்டோமில்ல...(ச்ச்ச்சும்ம்மா

நம்மட நாலு வருஷ கம்பஸ் வாழ்க்கை கிட்டத் தட்ட முடிவுக்கு வந்திட்டுது. ஆமா சார் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிட்டுது. மூஞ்சி புத்தகத்தில நம்ம நண்பர்கள் தங்கட பீலிங்க்ஸ்ஐ கொட்ட தொடங்கிட்டாங்க. விடுவமா நாங்க..நாங்களும் கொட்டுவம் இல்லே! கொட்டுறதுதான் கொட்டுறாய், அட வலைப்பூவில கொண்டே கொட்டு, இடத்தையும் நிரப்பினால் போல இருக்கும் எண்டிட்டு தான் இங்க கொட்ட வந்திருக்கான் சுயம்பு. 

சரி கவிதை மாதிரி ஒண்ணு எழுதுவம் எண்டு பிளான் பண்ணி இங்க வந்து குந்தியாச்சு.(ஆரம்பத்திலேயே கவிதை மாதிரி எண்டு சொல்லியாச்சு, வாசிச்சு முடிஞ்ச பிறகும் கவிதை மாதிரி எண்டு நம்பிட்டு போய்ட்டே இருங்க, நடு பிளாக்கர்ல காறி துப்பிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க)இதோ
கூப்பிடு தூரத்திலொரு
குறுக்குச் சந்தி
நம் லட்சிய பாதையில்!!! 

நிச்சயமில்லா கனவுகளுடன் 
நிரந்தரமாய் போன நட்புகளுடன்...

கூடவே 
போதும்டா சாமி என 
புலம்ப வைத்த வகுப்பறைகள்...
மருத்துவமே படிக்காமல் 
அறுவை சிகிச்சை செய்த ஆசான்கள்...
இடைக்கிடைதான் போனாலும் -நமக்காய்
நிரந்தரமாய் காத்திருந்த பின்வரிசை கதிரைகள்...
நித்திரையை குழப்பிய 
நண்பனின் கொறட்டை சத்தம்...
அனல் பறக்கும் விரிவுரையில் 
சில்லென வீசிய சிங்களத்து பைங்கிளிகள்...
நண்பகல் வெயில் குளித்து
நண்பிகளும் கூடி விளையாடிய கிரிக்கெட்... 

இவை தவிர்ந்த அனைத்தும் அறுசுவையாமென
அர்த்தம் காட்டிய கன்டீன் சாப்பாடு...
மூக்கு முட்ட குடித்து 
வயிறு வலிக்க வாந்தி எடுத்த பவிலியன்...

கோர்ஸ் வேர்க் குரூப் மெம்பர்ஸ் தேட 
ஒளித்திருந்த பஸ் கன்டீன்... 
தலை எழுத்தை தீர்மானிக்கும் ரெஜிஸ்டரில்
என் கை எழுத்திட்டே மை தீர்ந்த -நண்பர்களின் பேனாக்கள்...
வைவாவிற்கு மட்டுமே 
அணியப்பட்ட சீருடைகள்...
 ஏதோ கேள்விக்கு என்னவோ விடை எழுதி
எதிர் பாராமல் வரும் பரீட்சை முடிவுகள்...

அர்த்தமில்லா சீனியோரிட்டி
அளவில்லா போர்மாலிட்டி... 
போலித்தனமான புன்னகைகள் 
உரிமையான ஊடல்கள்...
அன்பே உருவான தழுவல்கள் 
அர்த்தமில்லா முறுகல்கள்...
சுயநல காற்று வாரியிறைத்த புழுதிகள்
விலை போன சுயங்கள்...
கருவிலேயே மடிந்து போன காதல்கள் 
இருந்தும் மனம் தளராத விக்ரமாதித்தர்கள்...
.....................................................................................
.....................................................................................
இவண்ணமே மேலும் சில 
மூட்டை முடிச்சுகளுடன்
கணப் பொழுதில் கடந்து விட்ட நான்காண்டு!!!   

ஓ இறைவா
ஒரு மந்தையில் எல்லா ஆடுகளுமே
தத்தம் திசையில் பயணிக்க போகுமொரு தருணம்....

அட ச்ச்சே ....
எதை மீட்டு பார்த்து எப்பிடி எழுதினாலும் கன்றாவி கவிதையும் வருதில்லை..பீலிங்க்ஸ்ம் வருதில்லை. கவிதை எழுத வருதில்லையே என்ற பீலிங்க்ஸ்ஐ தவிர!!!

அடங்கொய்யாலே பீலிங்கஸ்ஸயா நோண்டி பண்ணுறாய் எண்டு கடுப்பாகதீங்க நண்பர் பெருமக்களே!!! பீலிங்க்ஸ் என்று இன்னுமொரு புது முகமூடிய போட்டுக்கொள்ள நான் தயாரா இல்லை.  (எங்களுக்கெல்லாம் நடிக்கவும் தெரியாது..நடிக்கவும் வராது..நம்பிதான் ஆகணும் ). 

பிரிவு என்கிறது நமக்கு ஒன்னும் பெஸ்ட் டைம் இல்லையே!!! நம்மில பலருக்கும் இது பழகி போன ஒண்ணு தானே!  எங்கயாவது மனசில ரொம்ப ஓரமா ஒரு சின்ன வலி இருக்கத்தான் செய்யும், எண்டாலும் இது பழகிப்போன வலி. (இந்த வலியையே தாங்காட்டில் அப்புறம் எப்புடி இத படிச்சு முடிய வார தலை வலிய தாங்கப் போறீங்க ஆஹ்) ஒன்றாய் திரிந்த ஒவ்வொரு நட்பும் ஏதோ ஒவ்வொரு நாட்களில் பிரிந்து செல்ல தொடங்கிய போதே மர(ற)க்க தொடங்கிவிட்ட மனம்!!! 

ஒருவேளை பிரிவு நம்மிடடம் இருந்து பிரிந்து போகும் போது ரொம்பவே வலியா, பீலிங்க்ஸ்ஸா இருக்குமோ என்னவோ! இருந்தவரை, முடிந்தவரை நல்ல நண்பனாய் இருக்க முயற்சி செய்தேன் என்ற நம்பிக்கையுடன் பிரிவதற்கு என்னை தயார் படுத்தியாயிற்று 

"பிரிவோம் சந்திப்போம்" 


"Lecturers மட்டுமா அறுப்பாங்க,   நாங்களும் அறுப்பமில்ல"    Saturday, March 20, 2010

இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா...

ஆழம் தெரியாம காலை விட்டாச்சு அனுபவிச்சு தானே ஆகணும். ம்ம்ம் தூக்கின காவடிய எப்படியோ இறக்கிதானே ஆகணும். அட நீங்க நினைக்கிற மாதிரி ஒரு பிரச்னையும் இல்லைங்க. நானும் வலைப்பூ எழுதிறன் எண்டு வெளிக்கிட்டதை பீலிங்க்ஸ்சோட சொன்னன். அவ்வளவுதான். 

கடைய திறந்தாச்சு, கல்லாப்பெட்டில கம்முன்னு இருந்து ஈ ஓட்டினா என்ன அர்த்தம்.... அதான் குசும்பு பக்கத்திலையும் கொஞ்சம் முதலை போட்டுரலாம் எண்டு நினைக்கிறன் பாருங்கோ! 

ரவுடி ரங்கா, நாய் சேகரு, பிளேட்டு பக்கிரி, கருத்து கந்தசாமி, வெடிகுண்டு முருகேசன் எண்டு நம்ம சுயம்புவிற்கும் ஒரு பந்தா பேர் ஒன்னு வேணாமா? அதான் சுயம்புக்கு சுன்னத்து சடங்கு பண்ணி யம்பு ஆக்கியாச்சு. சரி வெறும் யம்புவா இருநதா நல்லா இருக்குமா??? அதால இன்று முதல் குசும்பு பண்ண போற நம்ம யம்புவ "ஜல்சா யம்பு" என்று அழைப்போமாக ...... குசும்பு இல (௦01)...
ஒரு நாளு நம்ம ஜல்சா யம்பு முதல்முதல்ல ஒரு சூப்பர் மார்கேட்க்கு போயிருந்தாரு. கண்ணில அம்பிட்டத எல்லாம் கையில அள்ளிக்கிட்டு billing section ல ரொம்ப நேரமா line ல நிண்டு counter கிட்ட வந்த யம்புக்கு Counter ல எழுதி இருந்த வசனத்தை பார்த்ததும் ஒரே கடுப்பாகி கன்னா பின்னானு சத்தம் போட ஆரம்பிச்சாரு 

" உங்க மனசில என்னதான் நினைச்சிட்டு இருக்கீன்ங்க..நாம ரொம்ப நேரமா லைன் ல நிண்டு கவுண்டர் கிட்ட வந்தா நியாயம் இல்லாமா "NEXT CUSTOMER" எண்டு போடு வச்சிருக்கீங்களே"  Thursday, March 18, 2010

இப்ப நாங்க இந்த ப்ளாக்கர்ல தான் இருக்கோம்


எப்பாச்சும் நம்ம பிளாக்கர் பக்கம் வந்திட்டு போன, போற மகா சனங்களே வணக்கம்!

பழைய பிளாக்கர் ல  ஏற்ப்பட்ட  தொழில்நுட்ப கோளறு காரணமாக பொறுக்கியும் சுயம்புவும் enakkuloruvan2010.blogspot.com என்ற புதிய முகவரியில் உள்ள புதிய பிளாக்கருக்கு தங்கள் எழுத்து மூட்டை முடிச்சுகளுடன் இடம்பெயர்ந்து இருக்காங்க என்பதை ரொம்பவும் கவலையுடன் அறிய தருகிறோம்!!!! 
நன்றி!

கடவுள்+மனிதன்=சமநிலை

அழுகை வந்து அழுதால் தான் அது அர்த்தமுள்ள அழுகை, சிரிப்பு வந்து சிரித்தால் தான் அது அர்த்தமுள்ள சிரிப்பு ,Romance mood வந்து Romance பண்ணினால் தான் அது நல்ல Romance ,அது போல Sex mood வந்து...  போதும்டா நிப்பாட்டு!!! இப்ப என்ன சொல்ல வாறாய் என்று நீங்க கடுப்பாகிறது புரியுது. சொல்லி விடுகிறேன்!!!  அதாவது ஆக்கம் போட்டு கன நாளாய் போச்சு எண்டு Feel பண்ணிட்டு இருந்தன். But எழுதும் போதும் அதுக்கெண்டு ஒரு Mood வந்தாதான் எழுத்து நல்லா வரும் இல்லையா? அதைத்தான் சொல்ல வந்தன். சரி சொல்லியாச்சு இல்ல!!! அப்புறம் கிளம்பு எண்டு யாரோ முணு முணுக்கிற மாதிரி படுது!!! இல்லை இனிமேதான் ஆரம்பமே!!! 

ஆங்கில புத்தாண்டு பிறந்த முதல் நாள்... (அது எப்ப பிறந்தீச்சு என்று குசும்பு பண்ணாம தொடந்து வாசியுங்க.) A9 பாதையால் உந்து உருளியில் பயணம் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நம்ம கூட ஒரு சின்ன பொண்ணு நம்ம Bike ல!!! என்ன்ன கூட ஒரு Figure ஆ எண்டு அவசரப்பட்டு வாயை பிளக்கமா எல்லாரும் திறந்த வாயை மூடுங்க. 6 வயசு பொண்ணு சின்ன பொண்ணு தானே!!! அதை தான் சொன்னன்!!! A9 பாதைல சுமார் 40km வேகத்தில Bike சும்மா  காற்றாய் பறந்திட்டு இருக்கு...என்னது காற்றாய் பறந்திட்டிருக்கா... 40km லையா எண்டு Feel பண்ணுறது புரியுது நண்பர்களே ...!!!  விஜயகாந்த் பறந்து பறந்து அடிச்சா நம்புவீங்க, நாம நம்ம Bike 40km ல பறக்குது எண்டா மட்டும் நம்ப மாட்டீங்க இல்ல!!! சரி அதை விடுங்க.. நாம Mater இற்குள்ள   போவம்.

உங்க எல்லாருக்கும் தான் தெரியுமே, இப்ப A9 பாதைல இருந்த கட்டங்கள் எல்லாத்தையும் எவ்வளோ கஷ்டப்பட்டு உடைச்சி அழகா அடுக்கி வச்சிருக்காங்க எண்டு!!! கோயில் தொடக்கம் கொட்டில் வரைக்கும் சமத்துவம் உலாவும் இடமே என்ற Concept ல முடிஞ்ச அளவிற்கு சிறப்பா செயற்பட்டு உடைச்சிருக்காங்க. அந்த கட்டங்கள் எல்லாம் குண்டு மழையில் தான் சிதைந்து போயின என்பதெல்லாம் சுத்த பொய். வடக்கின் வசந்தத்தில அடிக்கிற காற்று கஷ்டம் இல்லாம எல்லா இடமும் வீசுறதுக்குதான் அப்பிடி இடிச்சு உடைச்சு  சிதைத்து அழகு படுத்தி இருக்காங்க என்பது வெத்திலை மேல சத்தியம்.   நம்ம கூட வந்த சின்ன பொண்ணும் ஆஹா எவ்ளோ அழகா உடைச்சு அழகு படுத்தி இருக்காங்க என்று ரசித்து பார்த்துக் கொண்டே வந்தது எங்களை போலவே...(வேற எப்பிடி இதை எழுத முடியும்???)   இந்த நேரத்தில் அந்த சின்ன பொண்ணு  நம்ம  கூட கதைத்ததில் மனதை தொட்ட ஒரு விஷயத்தை மையப் படுத்தி தான் இன்றைய Mater ஐ  Open பண்ணலாம் எண்டு Plan பண்ணுறன். இனி கொஞ்சம் Serious ஆகவே!!! 

A9 பாதை அருகில் ஒரு கோவில்...அதுவும் பார பட்சம் ஏதும் இன்றி சிதைத்து அழகு படுத்தப் பட்டிருந்தது. இதை  பார்த்ததும் அந்த சிறுமி "இங்கே கோவிலையும் உடைச்சு போட்டினம்" என்றாள், தொடர்ந்து "நான் நினைச்சன் கடவுள் என்றால் இவைக்கு பயம் எண்டு, இவைக்கு அவருக்கும் பயம் இல்லை என்ன?" என்றாள் அப்பாவித்தனமாக..."அண்ணா கடவுள் கொஞ்ச   பேரை நல்லவையாயும் மிச்ச ஆக்களை கூடாதவையாயும்  ஏன் படைச்சவர்?" என்பது அவள் வாயிலிருந்த வந்த இரண்டாவது வினா. இது நம்ம எல்லோருடைய மனதிலும் ஒரு தடவையாவது தோன்றி இருக்க கூடும் என்றாலும்  6 வயது சிறுமியின் சிந்தனையை பொறுத்தவரை இது ஒரு பெரிய விடயமே என்பது மறுக்க முடியாதது, மறுக்கவும் கூடாது. "நான் அம்மா பகவானிடம் கேட்கப் போகிறேன் இந்த உலகத்தை நல்லதாக மாற்றுங்கோ என்று, ஏனென்றால் மற்ற சாமி ஒருத்தரும் எங்கை எண்டு தெரியாது, இவை தானே இங்க இருக்கிற சாமி என்ன அண்ணா ?"...ஆம்...இந்த குறிபிட்ட வசனம் தான் என்னை தொடர்ந்து நான் எழுதப் போகிற ஒரு கருத்தை சிந்திக்க வைத்தது. இப்போது கணிசமானவர்கள் அம்மா பகவானையும், சத்திய சாய் பாபாவையும் கடவுளாக, கடவுளின் அவதாரமாக ஏற்று வழிபடத் தொடங்கி விட்டார்கள். இருக்கிற தெய்வம் போதாது என்று இன்னும் தெய்வமா என்று சலித்துக் கொள்கிறவர் மத்தியில் அவர்களை முற்று முழுதாக மனப் பூர்வமாக இவர்கள்  வழிபடுகிறார்கள்.  அது ஏன்??? கண்ணன், ராமன் போன்று இல்லா விட்டாலும்  அவர்கள் வரிசையில் இவர்களும் அவதாரமாய் போனது  ஏன்???

"பாவங்களைப் படைத்தவன் சாத்தான்- But சாத்தானை படைத்தவன் கடவுள், So கடவுளே மிக பெரிய பாவி" என்று ஓஷோவும்... "கடவுள் இருக்கிறார் ஆனால் மதங்கள் சொல்வதைப் போல் இல்லாமல்" என்று நண்பர் அருள்நேசன் போன்றவர்களும் "கடவுள் காணமல் போய் விட்டார்" என்று மற்றும் சிலரும், "ஆண்டவனை பார்க்கணும்... அவனுக்கு ஊத்தணும்... அப்போ நான் கேள்வி கேட்கணும்" என்று இன்னும் சிலரும்  "கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்... அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்"  என்று காதலர்களும், வேறு பல காரணங்களுக்காய் வேறு பலரும்  கடவுள் மேல் கடுப்பாகி அவரைத் திட்டிக்கொண்டும் தேடிக்கொண்டும் திரிந்தாலும்  எப்படியாவது அந்த கடவுள் யார் என்று பார்த்து விட எல்லோருமே ஆவலாய்த்தான் இருக்கிறோம். எனக்கு கூட கடவுளை கொஞ்சம் அவசரமாய் பார்க்கணும் என்று விருப்பம், ஊத்தி  கொடுக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ இல்லை,  அவனை கட்டி வச்சு உதைக்கிறதுக்கு!!! அதை விட பெரிய Punishment ஒன்றும் இருக்கு!!! ஒரு கிழமை வேண்டாம் At least ஒரே ஒரு நாள் கடவுள்  என்னை போல மாறி  வாழ்ந்து பார்க்கணும் என்பதுதான். அப்ப தெரியும் மனிதன் நிமிசத்துக்கு ஒருக்கால் கடவுளே கடவுளே என்று ஏன் கடவுளை கூப்பிடுகிறான்  என்று. ஏதோ தமிழ் சினிமால வாற  மந்திரிமார் இருந்திட்டு எப்பவாவது தொகுதிக்கு வந்திட்டு போற மாதிரி, இல்ல நம்ம ரொசானும் அருளும் இருந்திட்டு எப்பவாவது Lectures இற்கு வந்திட்டு போற மாதிரி எப்பவாவது  ஒரு நாள் திடீர் என்று தோன்றி, உன்னை சோதிக்கவே திருவிளையாடல் புரிந்தோம், என்ன வரம் கேள் தருகிறேன் என்று சொல்லி அவன் கேட்கிறது சரியா தப்பா என்று கூட யோசிக்காம வேட்டைக்காரன் விஜய் மாதிரி "இந்தா வச்சுக்கோ" எண்டிட்டு டக் என்று மறைந்து போனால் மிச்ச நாள்ல நாம படுற கஷ்டம் எப்பிடி கடவுளுக்கு புரிய போது ஆஹ்!!! இப்பிடி எல்லாம் பல சிந்தனைகளுடன்  இருக்கிற எனக்கு அந்த சிறுமியின் வார்த்தை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. அதானே ஏன் அம்மா பகவானை, சாய் பாபாவை கடவுளாக நம்புறாங்க??? சரி இவர்கள்  முந்தி நாம் அறிந்த கண்ணனை போலவும் ராமனை போலவும் செயற்கரிய செயல்களை கூட செய்யவில்லையே???

ஓஷோ அடிக்கடி கூறுவது குழந்தைத் தனமாய் மாறி விடுங்கள் என்பதை தான். எதையும் ஆச்சரியமாய் பாருங்கள் என்பதைத்தான். எதையும் அறிவு கண் கொண்டு ஆராயாமல் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதைத்தான். அப்போதுதான் நீங்கள் அந்த கடவுளை அனுபவிக்க முடியும் என்கிறார் அவர். 

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இருந்தால் எங்கே? சாய் பாவாவும் அம்மா பகவானும் கடவுளா? எப்படி நம்புவது? என்று ஆயிரம் கேள்வி கேட்டு குழம்பிக்கொண்டு இருக்கும் போது அந்த குழந்தை எந்த சந்தேகமும் இல்லாமல் கண்ணுக்கு தெரிகிற கடவுள்கள் இவர்கள் என்று ஏற்றுக் கொள்கிறது. அதற்கு மேல் அவள் தன்னை குழப்பிக் கொள்ளவும் இல்லை...குழம்ப வேண்டிய அவசியமும் இல்லை. இதுதான் ஓஷோ சொன்ன குழந்தை தனமாக இருக்கலாம். சரி அது குழந்தை குழம்பாமல் ஏற்றுக் கொள்கிறது...பெரியவர்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள். சரி இதற்கு இப்படி ஒரு காரணத்தை முன் வைக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்த காரணத்தை எழுதத்தான் இவ்வளவு Built -Up குடுத்தேன். (நண்பர்களே கவனியுங்க. இவர்கள் கடவுள்கள்தான் என்று சொல்ல நான் முயலவில்லை. இவர்கள் உண்மையில் கடவுளின் அவதாரமாய் இருந்தால் இது காரணமாய் இருக்கலாம் என்றே சொல்ல முயல்கிறேன்


சமநிலை பற்றி அடிக்கடி நாம் கதைக்கிறோம் இல்லையா.? எதிலும் சமநிலை இருக்கவேண்டும், இருக்கிறது என்பதெல்லாம் யதார்த்த பூர்வமான உண்மைகள் இல்லையா? அப்படி பார்த்தால் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் கூட சமநிலை ஒன்று இருக்க வேண்டும். நான் நினைக்கிறேன் அந்த சமநிலையை பேணுவதற்காக  கடவுள் இப்போது  தன் செயற்பாடுகளை மட்டுப் படுத்தி விட்டார் என்று. அரச அதிபர் கிராம சேவகரிடம் தன் பொறுப்புகளில் சிலதை கொடுத்தது போல இப்போ இந்த பகவான்களிடம் கொஞ்ச பொறுப்புகளை கடவுள் கையளித்திருக்கிறார். புராணக் கதைகளை பார்த்தால் புராண கால மனிதன் கடவுளை நோக்கி தவம் செய்து, தவம் செய்து அவரைப் போட்டு நச்சரித்து தனக்கு வேண்டியதை எல்லாம் பெற்றுக்கொண்டான். சின்ன உதாரணம் சொன்னால் புஸ்பகவிமானம், நாக அஸ்த்திரம் என்று எல்லாத்தையும் கடவுளும் நேரடியாக  வந்து கொடுத்தார். (நேரடியா வராமல் விட்டால் மற்ற மனிதன் லவட்டிட்டு போடுவான் என்று தானே நேரில் வந்து கொடுத்தாரோ தெரியாது).  அந்த புஸ்பகவிமானம் தான் இன்றைய விமானம். பாரதப் போரில் பயன் படுதப்ப் பட்ட நாகாஸ்திரம் அணு ஆயுதம் போன்றது என்று வீரகேசரி வாரப் பத்திரிகையில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில் படித்தேன். ஆனால் நவீன மனிதன் செயற்கை கோள் முதல் அணுகுண்டு வரை இப்படி எல்லாமே தானே தனக்காக கடவுளை எதிர் பார்க்காமல் தயாரித்துக் கொண்டுள்ளான். அதாவது மனிதன் தான் செயற்பாடுகளை விரிவு படுத்தியுள்ள போது சமநிலையை பேணுவதற்காக கடவுள் தன் செயற்பாடுகளை மட்டுப் படுத்தியுள்ளார். தற்போதைய மனிதனுக்கு மன நிம்மதிக்காக மட்டுமே கடவுள் தேவைப்படுகிறார். ஆகவே அம்மா பகவான், சாய் பாவா போன்ற கடவுள்கள் தான் இப்போது மனிதனுக்கு தேவை. 

கடவுள் Busy ஆக இருந்த போது பூமியில் ஒரு சில பிரச்சனைகளை சமாளிக்க தன் அடியாட்களான நந்தி, ஆதிசேசன் போன்றவர்களை அனுப்பியதாக படித்திருக்கிறோம் இல்லையா. அவர்களை போல் இவர்களும் அவருடைய சாதுவான தொண்டர்களாக இருக்கலாம் என்பது என் கருத்து. பிறகு ஒரு நாள் சிவ பெருமான் நேரில் தோன்றி "திருவிளையாடலில் இது எல்லாம் சகயமப்பா" என்று சொன்னாலும் சொல்லக்கூடும் எது எப்படியோ இப்போ சமநிலையும் பேணப்படும், மனிதனும் நிம்மதியாக இருக்க முடியும் இல்லையா.  இதுவரை கண்ணுக்கு தெரியா கடவுளை நம்புகிற நாம், அந்த சிறுமி சொல்வது போல இவர்களை கண்ணுக்கு தெரிகிற கடவுளாய் நம்பினால் தவறில்லையோ எனவும் சிந்திக்க தோணுது.

மனப்பூர்வமான நம்பிக்கையுடன், தூய்மையான அன்புடன்  ஒன்றை நாம் நம்புகிறபோது, அந்த ஒன்றின் மீதான நம்பிக்கையும் அன்பும் பிறருக்கு இடைஞ்சல் இல்லாதபோது,  அந்த ஒன்று எங்களுக்கு மன நிம்மதியை தருகிற போது அந்த ஒன்று தான் கடவுள் ஆகிறது என்பது என் கருத்து. கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றால் தூய்மையான அன்பினால் வருகிற நிம்மதியில் இருக்கமாட்டாரா ? எங்கள் வலிமை குறைகிறபோது சமநிலையை பேண தன் செயற்பாட்டை விஸ்தரிக்க மாட்டாரா என்ன? 

"ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே" அப்பிடியா???. ஓகே ஓகே  முடிஞ்சுது! தமிழ் சினிமா படம் அடிக்கடி பாக்கிறதால வந்த பாதிப்பு. பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க மக்களே.


பி.கு:நண்பர்களே கவனியுங்க. இவர்கள் கடவுள்கள்தான் என்று சொல்ல நான் முயலவில்லை. இவர்கள் உண்மையில் கடவுளின் அவதாரமாய் இருந்தால் இது காரணமாய் இருக்கலாம் என்றே சொல்ல முயல்கிறேன்

அன்பே நீ....


அன்பே நீ
கரும்பு தோட்டத்தில் புகுந்த 
காட்டு யானையா
இல்லை
கம்பங் கொல்லையில் புகுந்த
காய்ந்த மாடா 
என் இதயம் இருந்த இடம் 
எனக்கே தெரியவில்லையே!!!

இதுவும் தேவை இன்னமும் தேவை


ஆழிப் பேரலையின் 
அகண்ட வாய்க்குள்
ஆயிரம் ஆயிரம் பேர்
அலறித் துடித்த போது....

எத்தனை மீன்கள் தான் 
அடி மனசுக்குள் ஆனந்தப்  பட்டனவோ- நம்
இனப் படுகொலையாளிகளுக்கு 
இதுவும் தேவை
இன்னமும் தேவை என!!!

அழகே உனக்கோர் ஓர் எச்சரிக்கை


பெண்ணே....
என் 
வாலிபக் கோட்டைக்குள்   
வன்முறைகளைத் தூண்டாதே!!!

இரு 
கரு விழி
சன்னங்கள் கொண்டு -என்
இதயத்தைத்  துளைக்காதே !!!

உன் 
உதட்டோரப் புன்னகையில் 
பூப் பூக்கும் கன்னக்குளியில் -எனை 
காணாமல் போகச் செய்யாதே!!!

எல்லை தாண்டிய பயங்கர வா(வ)தம் இது 
இத்தோடு நிறுத்தி விடு!!!

இல்லையேல்....
காதல் சட்டத்தின் கீழ் கைதாகி 
கம்பி எண்ணுவாய் என் மனச் சிறையில்!!! 

செத்துக் கொண்டிருக்கிறேன்....


சகியே!
துடிக்கிற இதயத்தில்
குடிக்கிறது இரத்தம்- உன் காதல்!

தினமும் 
காதல் மனு மனுவாய் அனுப்பி
அணு அணுவாய்ச் செத்துக் கொண்டிருக்கிறேன்
நான்!!!
 

எந்தக் குற்ற வழக்கு???செவ்வாய்க் குற்றமாம் உனக்கு
உன்னை மணந்தால் மரணமாம் எனக்கு-அடி
உன்னை மறந்தாலே மரணமடி எனக்கு -இது
எந்த குற்ற வழக்கு
உன் செவ்வாயில் வீழ்ந்ததா பிணக்கு???