Thursday, March 18, 2010

தலை எழுத்தை பிரமனவன் எழுதல்லையா கிறுக்கிட்டான்

கடுவினைப் பயனால் யாக்கை
கலங்கி நான் மாளா வண்ணம்
சடுதியில் காக்க என்றும்
சற்குண சிரஞ்சீவியே
அடுதிறல் வீமன் முன்னோய்
அமைந்தனை ஆற்றல் வல்லாய்
கடுஞ் சனிப் பார்வை நீக்கி
காக்க நீ என்னை மாதோ

இந்த கடுவினை பயன்தான் நண்பர்களே விதி. நாம் எழுதுகிற பாவ புண்ணியப் பரீட்சைக்கு கிடைக்கிற புள்ளிகளே ஊழ்வினை என்றும் அதற்கான சன்மானமே விதி என்றும் வைத்துக் கொள்வோமே!

நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமன்றி
வேறு யாரம்மா?
எதை உன்னால் தடுக்க முடியாதோ அதுதான் விதி என்பது கண்ணதாசனின் கருத்து.
ஆனால் எங்கேயும் எப்போதும் எந்தக் கருத்திற்கும் முரண் கருத்துக்கள் இல்லாமல் போனதில்லையே
இலக்கியத்தின் பார்வையில்
விஞ்ஞானத்தின் பார்வையில்
உளவியலின் பார்வையில்
.............................................
.............................................
என்று தாய் அன்பிலேயே முரண்பட்டவர்கள் நாமல்லவா!!!
நான் நினைக்கிறேன் மனிதன் தனது 6 வது அறிவை மிகவும் உச்ச அளவில் முரண்படுவதற்கே பயன்படுத்தியுள்ளான்!

இங்கே நாம் பார்க்கிற முரண் வாதம் தான் "விதியை மதியால் வெல்லலாம்" என்பது....
"வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்" என்பது எதிர் தரப்பு வாதம்.
அப்பிள் பழம் கீழே விழும் என்பது புவி ஈர்ப்பு விதி!
கண்ணாடி நொறுங்கும் என்பது சடப் பொருள் பண்பியல் விதி
இது இரண்டையும் தெரிந்து வைத்திருக்கிறது உன்னோட மதி (அதுதான் உங்க Brain). அப்போ உன் மதியை பாவித்து கண்ணாடியை கீழே விழுந்து நொறுங்காமல் பார்த்துக் கொள்வதால் தோற்றுப் போகிறது விதி என்பது அவர்களின் கருத்து.
சரி விதியை மதியால் வெல்வோம் என்று கூச்சல் போடுபவர்களே சரி உங்கள் மரணத்தை வென்று காட்டுங்கள் பார்க்கலாம் என்றும், அடே விதியை மதியால் வெல்கிறாயா அதுவும் விதிதான் என்கிறது நமது ஜோதிட மன்மதன் சுப்பையா வாத்தியாரின் அணி...

இந்த கூச்சல்களுக்கு மத்தியில் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த குழந்தையாய் திரு திரு என விழிப்பது நம் போன்ற மதில் மேல் பூனைகள் தானப்பா. ஆமாம் கடவுளை நம்புபவன் விதியையும் நம்பாதவர்கள் மதியையும் மனப்பூர்வமாக நம்புகிறார்கள். நிம்மதியாய் இருக்கிறார்க்கள். நம் போன்ற சிலர்தான் ஊசலாடிக் கொண்டிருகிறோம்.

ஜோதிடப் பகுதியில் கவனம் திரும்பிய போது தான் என் மனதையும் நீண்ட நாளாக அடைத்துக் கொண்டிருந்த இந்த கேள்விக்கு ஒரு Idea தோன்றியது. அதையே நான் உங்களுடன் பகிர விளைகிறேன்.

நாம் செய்த வினைகளை அனுபவிக்கவே நாம் பிறப்பெடுக்கிறோம். இந்த ஜென்மம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது பிறக்கும் போதே பிரம்மனால் விதிக்கப்பட்டு விடுகிறது. நாம் அப்படித்தான் இருக்கிறோமா என்று கவனிக்கும் அம்பயர்கள் தான் நவக்கிரகங்கள்.
Cricket இல் Cap பார்த்து Out ஆகாமல் Runs அடித்து விளையாடலாம். But இந்த விதி விளையாடுகிற Cricket ல் ஆட வைப்பவர்களும், அடிக்க வைப்பவர்களும் Out ஆக்குபவர்களும் நவக்கிரகங்களே. கடவுள் என்கிற 3rd அம்பயர் இடம் பூரணமாகச் சரணடைந்தாலன்றி நிம்மதியாக இந்த ஆட்டத்தில் நாம் கலந்து கொள்ள முடியாது நண்பர்களே!
நாம் பிறக்கிற போது கிரகங்கள் வானில் சஞ்சரிக்கிற நிலைகளை படம் பிடிதுக் காட்டுகிற அமைப்பே ஜாதகம் ஆகும். இந்த ஜாதகத்தில் நான்கு பிரதானமான இஸ்தானங்கள் உள்ளன.
  1. விதி இஸ்தானம் - குழந்தை பிறக்கிறபோது கிழக்கு திசையில் இருந்த ராசி வீடு.(லக்கினம்)
  2. மதி இஸ்தானம் - குழந்தை பிறக்கிறபோது சந்திரன் நின்ற ராசி வீடு (ராசி).
  3. கதி இஸ்தானம் - குழந்தை பிறக்கிறபோது சூரியன் நின்ற ராசி வீடு.
  4. யாப்பியம் - நமது பெயர் அமைப்பால் நமக்கு அமைகிற ராசி.
இந்த நான்கு இஸ்தானங்களும் சரியாக அமைந்தால் தான் கிரக மாற்றங்கள் நன்றாக அமைய முடியுமாம். இதைத்தான் ஜோதிடம் சொல்கிறது விதி கெட்டால் மதியை பார், மதி கெட்டால் கதியை பார், கதி கெட்டால் யாப்பியத்தை பார் என்று. அதாவது விதி கெட்டிருக்கிற நிலையில் மதி நன்றாக இருந்தால் அது விதியின் தாக்கங்களை சமாளிக்கும், கட்டுப்படுத்தும், சில சமயங்களில் வெல்லும். ஆகவே இதுவே விதியை மதியால் வெல்லலாம் என்ற கருத்தின் அடிப்படையாக இருந்திருக்கக் கூடும்.

ஆனால் நாம் ஆறாவது அறிவிருந்தும் பன்றி கூட்டம் போன்றவர்கள் தானே. முதல் பன்றி போன வழியிலேயே ஜோசிக்காமல் போகிறவர்கள். ஏன் எதற்கு என்று மற்ற பன்றி சொன்னால் மட்டுமே தெரிந்து கொள்கிறவர்கள். (சில விடயங்களில் ஏன் எதற்கு என்று சொல்பவரும் பல விடயங்களில் முன் சென்றவர்கள் போலவே நடப்பதால்தான் அவரையும் இங்கே பன்றி என்கிறேன்) 

களவும் கத்தும் மற என்பதை களவும் கற்று மற என்றும்
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் என்பதை
ஆயிரம் பேரைகொன்றவன் அரை வைத்தியன் என்றும்..... இப்படி எத்தனையோ!!!
அதைப் போலவே ஜோதிடத்தை அடிப்படையாய் வைத்து யாரோ ஒருவர் விதியை மதியால் வெல்லலாம் என்று கூற நாம் வாலை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருகிறோம் என்பது சுயம்புவின் கருத்து....

No comments:

Post a Comment